Tuesday, August 31, 2010

காரகுழம்பு

சின்ன வெங்காயம் இரண்டு அல்லது மூன்று
கறிவேப்பில்லை இரண்டு கொத்து.
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தியம் ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
மேலே குறித்தவைகளை தனித்தனியாக சிறிது எண்ணையில் வறுக்கவும் .
ஆறவைத்து மிக்சியில் . கடாயில் இரண்டு டீஸ்பூன் என்னை விட்டு ,கடுகு ,உடைத்த உளுந்து ,சீரகம் தாளிக்கவும் .(வடகமும் தாளிக்கலாம்)கடுகு வெடித்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும் .மிளகாய்த்தூள் ,தனியாதூள் ,மஞ்சள்தூள் சேர்க்கவும் .புளியை
கரைத்து ஊற்றவும் .மேலும் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கொதிக்கவிடவும் . இரண்டு டீஸ்பூன் தூள் உப்பு சேர்க்கவும்.எண்ணெய் தனியே விட்டு பிரியும் போது தீயை நிறுத்தவும்.
தேவை என்றால் பெருங்காயம் சிட்டிகை சேர்க்கலாம் .வெல்லமும் சேர்க்கலாம்